விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த கால்வாய்களில் 1000 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.