நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திரவ இயக்க உந்துமத்தில் கிரையோஜெனிக் என்ஜினுக்கான எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மிக பிரம்மாண்டமான ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் கொண்ட உற்பத்தி கூடம் இங்கு அமைந்துள்ளது.
ராக்கெட் என்ஜின் எரிபொருள்களுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில், மருத்துவ ரீதியான பயன்பாட்டுக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம்.
இந்த சூழ்நிலையில் நாட்டில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திரவ இயக்க உந்தும வளாகத்திலுள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு கூடத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, முதல் முறையாக இன்று(ஏப்.26) இங்கு 14 டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த 14 டன் ஆக்ஸிஜன் உற்பத்தியில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 8 டன்னும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6 டன்னும் தமிழ்நாடு அரசு மருந்து சேவை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பதால் அண்டை மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழில் வெளியானது புதிய கல்விக் கொள்கை!