தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 20க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் சைக்கிளில் வந்து மனு அளித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு சைக்கிள் ஓட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்த லாரி உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சுங்க கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், காப்பீடு உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: டீசல் விலை உயர்வு: மார்ச் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!