திருநெல்வேலி: ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மார்ச். 14) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பங்குனி உத்திர திருநாள் 18.03.2022 அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 26.03.2022 கடைசி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால்; ரூ.186 கோடி ஒதுக்கீடு