ETV Bharat / state

’அரசு சொல்றத கேளுங்க!’

திருநெல்வேலி: கரோனா பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அரசு சொல்றத கேளுங்க; என பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பேருந்தில் ஏறி தனி ஆளாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

author img

By

Published : Apr 10, 2021, 11:07 AM IST

நெல்லை பெண் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு!

நெல்லை மாவட்டத்தில் கரோனா தாக்கம் தற்போது அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் நேற்று (ஏப். 9) 79 பேருக்கும் இன்று 115 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில் நெல்லை மாநகர காவல் துறையினர் நெல்லை, கொக்கிர குளத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதித்துவருகின்றனர்.

மேலும் போக்குவரத்து காவல் பெண் ஆய்வாளர் மகேஸ்வரி அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பொதுமக்களிடம் கரோனாவால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது - சிறிது நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் செல்ல வேண்டும் என்றும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து காவலர் என்றால் போக்குவரத்தைச் சரிசெய்வதும் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூக அக்கறையுடன் பேருந்துப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி வகுப்பை தொடங்கும் ஐஐடி மெட்ராஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.