தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அரசு மதுபான கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனாலும் சில பகுதிகளில் மதுப்பிரியர்கள் செய்வது அறியாமல், கிராமங்களில் உள்ள கடைகளை உடைத்து மதுபாட்டில்களைத் திருடிச் செல்லும் நிலை ஏற்பட்டுவருகிறது.
இதனைத் தடுக்கும்விதமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் உள்ள மதுபாட்டில்களைக் காவல் துறையினர் அங்கிருந்து இடமாற்றம் செய்ய முடிவுசெய்தனர்.
அதன்படி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மதுபான கடையிலிருந்த மதுபாட்டில்களை வாகனம் மூலம் ஏற்றி, முன்னீர்பள்ளத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காற்றில் பறந்த சமூக இடைவெளி! பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!