ETV Bharat / state

கூடன்குளம் இரண்டாவது அணு உலை பழுது: மின் உற்பத்தி பாதிப்பு!

கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதால், 1000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கூடன்குளம் அணு உலை பழுது
கூடன்குளம் அணு உலை பழுது
author img

By

Published : Jun 19, 2021, 10:23 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மத்திய மின் தொகுப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் பழுது ஏற்பட்டு, மூன்று தினங்களில் சரி செய்யப்பட்டு உடனடியாக மீண்டும் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது அணு உலையில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலையில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கும் என அணு மின்நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதலாவது அணு உலையில் வழக்கம் போல 1000 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.