திருநெல்வேலி: மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (ஆக.11) இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் அணு உலை கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இங்கு தற்போது தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு