அயோத்தி தீர்ப்பையொட்டி நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக காவலர்கள் தங்கள் காவல் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். காவல் வாகனம் திரிகூடபுரம் அருகே சென்றபோது வாகனத்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஆயிஷா பானு என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த நான்கு பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் மாவோயிஸ்ட் தீபக் கைது!