சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு 3,319 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,506 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,653 விவிபேட் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.
அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குத் தனி வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுசெல்லும் பணி இன்று தொடங்கியது.
மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்களை வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு சக்கர வாகனங்களும் கொண்டுசெல்லப்பட்டன. இதேபோல் தொற்று தடுப்புப் பொருள்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குத் தனியாகக் கொண்டுசெல்லப்படுகின்றன.
இதனையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், துணை ராணுவப்படை கொண்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் பதில்