திருநெல்வேலி: திசையன்விளை அருகேவுள்ள கூட்டப்பனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நடுக்கடலுக்கு அருகே மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்தபோது வானத்தில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே இருந்து வெண்மை நிறத்தில் சுழல் போன்ற அமைப்பு கடல் நீரை நோக்கி வந்துள்ளது.
இதனைக் கண்ட மீனவர்கள் அதனை நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது அசுர வேகத்தில் சுழன்ற சுழல் கடலுக்குள் இருந்து நீரை உறிஞ்சி சென்றுள்ளது. இந்த விநோதமான சம்பவம் அரிதாகத் தான் நிகழும். இந்த காட்சியை மீனவர்கள் தங்கள் படகில் இருந்தவாறே செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
பொதுவாக பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற நிகழ்வு நடைபெறும். இதற்கிடையில் மீனவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Youtube-யை கலக்கும் கடல் ராசாக்கள்