ETV Bharat / state

தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் - தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது எனவும்; குரூப் 4 தேர்விற்கான அட்டவணை இம்மாத மத்தியில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு
தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு
author img

By

Published : Mar 1, 2022, 10:53 PM IST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கேள்வித்தாள், விடைத்தாள் வைக்கப்பட உள்ள கருவூலங்களை அதன் தலைவர் பாலச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குரூப் 2 தேர்வுக்கு பாடத்திட்டம் தயாரிப்புப் பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும். இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 காலிப்பணியிடம் 5,000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேர்வுகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு

காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு

கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையம் சிறப்பாகச் செயல்படுகிறது. தேர்வர்களுக்கு ஆணையம் மீது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கேள்வித்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம்

வாகனங்களை முழுமையாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை. டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. மீண்டும் அதனை நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

ஆனால், டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.