ETV Bharat / state

வெளியான 'மாமன்னன்' படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பு; நெல்லையில் 20 பேர் கைது - In Tirunelveli 20 arrested for protesting

பல தடைகளைத் தாண்டி திரையங்குகளில் வெளியாகிய 'மாமன்னன்' திரைப்படத்தை ஒட்டி இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் 100 அடி உயர பேனர் வைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 29, 2023, 4:13 PM IST

Updated : Jun 29, 2023, 5:02 PM IST

திரையங்குகளில் வெளியாகிய 'மாமன்னன்' திரைப்படத்தை ஒட்டி இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் 100 அடி உயர பேனர்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 20 பேரை மாநகர போலீசார் கைது செய்தனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேல், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'மாமன்னன்' (Maamannan) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஜூன் 29) திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தேவர் மகன்' (Thevar Magan) படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் விமர்சனம் செய்திருந்தார்.

குறிப்பாக, தேவர் மகன் படம் தனது சிறுவயதில் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பேசி இருந்தார். மேலும், தேவர் மகன் படத்தில் வரும் 'போற்றி பாடடி பொன்னே... தேவர் காலடி மண்ணே' என்ற பாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பேசியிருந்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜின் பேச்சுக்கு குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தென் மாவட்டங்களில் மாமன்னன் படத்தைத் திரையிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என சில சமுதாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தென் மாவட்டங்களில் மாமன்னன் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்திலும் மாமன்னன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை சந்திப்பு அருகே மதுரை சாலையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்கள் 100 அடி உயர பேனர் வைத்து தங்களின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது அருகில் நடிகை உதயநிதி ஸ்டாலினுக்கு 100 அடியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இணையாக மாரி செல்வராஜுக்கும் 100 அடியில் பேனர் வைத்துள்ள நிலையில், திரைப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் இந்தப் பேனரை வியந்து பார்த்தனர். இதற்கிடையில், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறி, பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 பேர் ராம் முத்துராம் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், பவானி வேல்முருகன் உட்பட அனைவரையும் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பவானி வேல்முருகன் கூறுகையில், தென் தமிழகத்தில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளதன் மூலம் சாதி கலவரம் தூண்டப்படுவதாகவும், முதலமைச்சரே இதற்கு ஆதரவாக உள்ளது போல் தெரிவதாகவும் குற்றம்சாட்டினார். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் திராவிடக் முன்னேற்ற கழகம் இதனால், வாக்குகளை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Maamannan: படத்தைப் பாராட்டிய கமல்.. நன்றி தெரிவித்த படக்குழு!

Last Updated : Jun 29, 2023, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.