ETV Bharat / state

கடவுளின் குழந்தைகளுக்கு கல்வி ஒளி: நெல்லை 'அப்பர் கிளாப்டன்' பள்ளியின் பின்னணி! - தேவதாசி

தேவதாசிகளாக இருந்தவர்களின் பெண் குழந்தைகள் உட்பட மறுக்கப்பட்ட பெண் கல்வியை மீட்டெடுத்து தந்த நெல்லை "அப்பர் கிளாப்டன் பள்ளி" தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் பிண்ணனியில் வெளிவராத வரலாறு குறித்த தகவல்களையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கடவுளின் குழந்தைகளுக்கு கல்வி ஒளி: நெல்லை 'அப்பர் கிளாப்டன்' பள்ளியின் பின்னணி!

author img

By

Published : Nov 15, 2022, 6:36 PM IST

சென்னை: நெல்லை என்றவுடன், அனைவருக்கும் அல்வாவும் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலும் தான் நினைவுக்கு வரும். ஜனசந்தடியுடன் பரபரப்பாக இயங்கும் கீழ ரத வீதியில், கோயிலில் இருந்தும் இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்தும் சற்றே தள்ளி, பழமையின் சுவடு மாறாமல் நூற்றாண்டு கடந்து ஒரு பள்ளி. 1863-ல் ஆரம்பிக்கப்பட்டு, பொலிவு குன்றினாலும் இன்றளவும் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக, நெல்லைச் சீமையின் தொலைந்துபோன பக்கங்களின் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது.

நெல்லையும் அப்பர் கிளாப்டன் பள்ளியும்: இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர், நெல்லையில் தேவதாசிகளின் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க "அப்பர் கிளாப்டன் (Upper Clapton) பள்ளி" தொடங்கப்பட்டது. தென் தமிழகத்தில், 'ஐரோப்பிய மிஷனரி' மகளிரால் பெண்களுக்கென உருவான 'முதல் கல்விக்கூடம்' இதுதான். அழகும் கம்பீரமும் மிக்க, ஆனால் ஒரு சிக்கலான வலைப்பின்னல் வடிவமைப்பிலான இந்த பள்ளி, மறக்கப்பட்ட வரலாற்றை தன்னகத்தே சுமந்து, நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரில், அந்த கால தேவதாசிகள் தெருவை அடுத்து அமைந்துள்ளது. இன்று அது ஒரு நடுநிலைப் பள்ளி!

பெண் குழந்தைகளின் கல்வியே நோக்கம்: இன்றைய நெல்லைவாசிகளுக்கு ஏபிஎம் தெரு என்றால் கோயிலுக்கு எதிரே உள்ள மார்வாடி தெரு என்றுதான் தெரியும். தேவதாசிகள் வாழ்ந்த அறம் வளர்த்த புற மாடத்தெருதான் APM தெரு என்று சுருங்கியது. மாட மாளிகை என இருந்த அந்த தெருவில் கைமாறாமல் இன்னும் எஞ்சியுள்ள வீடுகள் ஒரு சில மட்டுமே. அவையும் அதன் வாரிசுகளால் விரைவில் விற்பனைக்காக உள்ளன. இந்த தெருவுக்கு அடுத்து அமைந்துள்ளதுதான் 'ஐரோப்பிய மிஷனரி' மகளிரால் உருவான அப்பர் கிளாப்டன் பள்ளி. பெண்களுக்கான முதல் பள்ளி என்றாலும், இதன் அடிப்படை நோக்கம், 'தேவதாசிகளின் பெண் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத் தருவதே' ஆகும்.

மறுக்கப்பட்ட பெண் கல்வியை மீட்டெடுத்து தந்த நெல்லை "அப்பர் கிளாப்டன் பள்ளி"

பெண்ணடிமை தனத்தை உடைத்த வரலாறு: பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சாதிய இறுக்கமும், ஒடுக்குதலும், பெண்ணடிமைத்தனமும், நிலவுடமையும் கோலோச்சிய அந்த காலகட்டத்தில், இது ஒரு மிகப்பெரிய சவாலான ஒன்று. இதனை மிஷனரி மகளிர் (மறைபரப்பு பணியாளர்கள்) எதிர்கொண்ட வரலாறு வியப்பைத் தருவது. 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு அடுத்த ஆண்டு வெளியான விக்டோரியா பேரரசியின் பிரகடனம், இந்தியர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று ஆங்கிலேய அரசு உறுதியளித்தது. இதனால், காலனிய ஆட்சியின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருந்த சூழலில், இது சாத்தியமாகி இருக்கிறது.

லண்டன் to நெல்லை வந்த ஆன் சட்டன்: இந்த நிலையில், லண்டன் அப்பர் கிளாப்டனில் வாழ்ந்த ஆன் சட்டன் என்ற பெண்மணி, இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஸெநானா குழு என்ற பெண்கள் அமைப்பை தோற்றுவிக்கிறார். ஸெநானா என்றால் பாரசீகத்தில் அந்தப்புரம் (அ) வீடுகளில் பெண்கள் பகுதி என்று பொருள். மிஷனரி பாதிரியார்களின் மனைவியர் மற்றும் தன்னார்வலர்கள், இதில் இணைந்து செயல்பட்டனர். இந்தியாவில், 1852-ல் வங்காளத்தில் கால் பதித்து, பின்னர் நெல்லைக்கு வருகிறார்கள். ஏன் நெல்லை?

தமிழகத்தில், சென்னையை அடுத்து நெல்லையே 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கிறிஸ்தவ மறைபரப்பு மற்றும் கல்வி-சமூக சேவையின் கேந்திரமாக விளங்கியது. மிஷனரிகளின் கல்வி பனியே, நெல்லைக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமையைத் தந்தது.

தேவதாசி முறை ஒழிக்க எடுத்த முதல் முயற்சி: “ஸெநானா குழுவினருக்கு, தேவதாசிகளின் வாழ்க்கை விசித்திரமானதாக தெரிந்தது. தேவரடியார்கள் என்ற அந்தஸ்து சரிந்து வீழ்ச்சியடைந்து தேவதாசிகள் ஆன அவலம், அவர்கள் பால் ஈர்த்தது. தேவதாசிகளின் ஆண்பிள்ளைகள் பெரும்பாலும் இசை, நாட்டியம் பயின்று நட்டுவனாராக ஆகிவிடுகின்றனர். பெண் பிள்ளைகள் நிலையோ பரிதாபம். செல்வந்தர் யாருக்காவது ஆசை நாயகியாக இல்லை என்றால், பாலியல் தொழில்தான். அறிவுக்கூர்மையும், சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உள்ள இந்த பெண் குழந்தைகள், எழுத்தறிவு இல்லாமல் இருந்ததைக் கண்ட ஸெநானா குழுவினர் அவர்களுக்கு கல்வி அளிப்பதை, சமூக மாற்றத்திற்கான ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக மேற்கொண்டனர். அப்படி ஆன் சட்டன் நினைவாக உருவானதுதான் "அப்பர் க்ளாப்டன் பள்ளி" என்கிறார், ஆய்வாளரும் பதிப்பாளருமான லேனா குமார்.

கல்விக்கூடமே முதல் வழி: சரி பள்ளியை எங்கு கட்டுவது? நகருக்கு வெளியில் இருந்தால், வீடு, கோயில் என அடைந்து கிடக்கும் இப்பிள்ளைகள் எப்படி வருவார்கள்? எனவே, தேவதாசி தெருவை அடுத்த தெருவிலேயே பள்ளி உருவானது. ஸெநானா குழுவின் எமிலி லீவிஸ் அம்மையாரும் பிறரும் பள்ளியைத் தொடங்கினர். குழந்தைகள், தங்கள் தெருவில் இருந்து யாருக்கும் தெரியாமல், எளிதாக, விரைவாக வரவும், வெளியேறவும் ஏற்றவகையில், பள்ளிக்கு 5 வாயில்கள் இருந்தது. ஒரு வகுப்பில் இருந்து மற்ற வகுப்பிற்கும், மேல்மாடி வகுப்புகளுக்கும் நூல் பிடித்ததுபோல வழியும், எதிர்பாராத தாக்குதல் நடந்தால் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க ஒரு இரகசிய அறையும் அதன் சிறப்பு அமைப்பு.

ஆய்வுகள் கூறும் உண்மை விபரம்: “விடுவார்களா நெல்லையின் ஆதிக்க சாதியினர். வெள்ளாளர் மற்றும் பிராமணர்களிடம் இருந்து தொடர் இடையூறுகள். தங்களது மத ஆச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் கெடுப்பதாகப் பரப்புரை, அவதூறு மற்றும் அவ்வப்போது தாக்குதல் என பிரச்சனை செய்து வந்தனர். தொடக்கத்தில், சிவபெருமானின் பெயரான ஆட்கொண்டார் என்பதே அனைத்து பிள்ளைகளுக்கும் தகப்பனார் பெயராக பதிவேட்டில் உள்ளது. இதுவும் ஒரு உத்தி,” என்கிறார் பள்ளியைப் பற்றி தனது ஆய்வு நூலை விரைவில் வெளிக்கொணர இருக்கும் என்கிறார்.

சிறுமிகளின் அடிமை விலங்கை உடைத்தவர்: இந்த நிலையில், ஸெநானா குழு, இங்கிலாந்து திருச்சபையின் அங்கீகரத்துடன் ஸெநானா மிஷன் ஆகிறது. அதற்குப் பொறுப்பேற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏமி கார்மைக்கிள் அம்மையார், கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டு ஏலம் விடப்படும் சிறுமிகளை விடுவித்து, பள்ளிக்கு கொண்டு வருகிறார். நோய் நொடியில் இருந்து குணமாக, கோயிலுக்கு நேர்ந்து விடுவதாக வேண்டிக்கொள்வது அக்கால வழக்கு. அதுவும் 6 முதல் 8 வயதிற்குள் நேர்ந்து விடுவதும், அவர்கள் ஏலம் விடப்படுவதும் அப்போதைய நடைமுறை என, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களை விடுவித்து பாதுகாப்பது அவ்வளவு எளிதானதல்ல. காரணம், இது தங்கள் அதிகாரத்திற்கு விடப்படும் சவாலாகக் கருதிய மேட்டுக்குடியினரின் தாக்குதல்.

மதம் மாறியும் விடாத சாதிவெறி: உயர்சாதியினர், நேரடியாக தாக்குதலில் இறங்கினார்களா? என்று வியப்பு மேலிடலாம். பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் 1859-ல் நடந்த ஒரு நிகழ்வை தெரிவிக்கிறார். நெல்லை அருகே உள்ள புதியம்புத்தூரில் இருந்து பட்டியல் இன பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வருகிறார். வந்த இடத்தில் உடல்நிலை சரியில்லாமல், அரசு மருத்துவமனையில் சேர்ந்து இறந்து போகிறார். கிறிஸ்தவத்துக்கு மாறியிருந்த அவர், இறப்பதற்கு முன்னர் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறார். பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ கல்லறைக்கு எடுத்துச் செல்லும்போது, பறையன் சவம் பிரதான வீதி வழியே போகக்கூடாது என்று, வெள்ளாளரும், பார்ப்பனரும் தடுத்து கல்லெறிதலில் இறங்குகிறார்கள். காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் அளவிற்கு அவர்களின் வன்முறை வெறியாட்டம் இருந்திருக்கிறது.

தேவதாசி முறையை ஒழிப்பில் 'முதல் பெண்': கார்மைக்கிள், தமிழகப் பெண்கள்போல சேலை அணிந்து, தனது வெள்ளை நிறத்தை மறைக்க முகத்தில் காபி பொடி பூசி கோயிலுக்குள் சென்றிருக்கிறார். பல இடங்களுக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்து, நேர்ந்து விடும் பிள்ளைகள், குழந்தை விதவைகள் என பலரை மீட்டு வந்திருக்கிறார். விடுவிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. பள்ளி நெல்லையில் தொடர், பாதுகாப்பு கருதி கார்மைக்கிள், தொலைவில் உள்ள டோனாவூருக்கு இடம் பெயர்ந்து மறுவாழ்வு இல்லம் தொடங்குகிறார். அங்கும் அவருக்கு இடையூறுகள் தொடர்கிறது. “டோனாவூரில் படித்த, தேவதாசி குழந்தைகளே நெல்லைச் சீமையின் முதல் தலைமுறை ஆசிரியர்கள் ஆனார்கள். இன்று, டோனாவூர் இல்லம், ஆசிரியர் பயிற்சி, மருத்துவமனை என விரிவடைந்துள்ளது” என விவரிக்கிறார், குமார்.

கார்மைக்கிளின் முயற்சியும் அதன் விளைவுகளும்: குழந்தை திருமணம் மற்றும் பலதார மணத்திற்கு எதிராக, கார்மைக்கிள் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அன்றைய ஆங்கில அரசிற்கு ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்தகைய முயற்சிகளால் 1872-ல் கொண்டுவரப்பட்ட இந்திய கிறிஸ்தவ திருமண சட்டம், கிறிஸ்தவர்களுக்கு பலதாரமணத்தை தடை செய்தது. இந்தியாவில் பலதாரமணத்தை தடை செய்த முதல் சட்டம் இதுதான். இந்து திருமண சட்டம் நாட்டு விடுதலைக்குப் பிறகே வருகிறது!

தேவதாசி ஒழிப்புச் சட்டம்: தேவதாசிகளின் முன்னேற்றத்துக்கான இவரது செயல்பாடுகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பினைத் தருகிறது. முத்துலட்சுமி ரெட்டியின் தாயாரும் தேவசாசிதான் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இவர்களின் முயற்சியால் 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், கார்மைக்கிள் 85 ஆண்டுகளாக இந்தப் பணியில் முழுமூச்சாய் செயல்பட்டுள்ளார்.

இத்தகைய வரலாற்றைக் கொண்டுள்ள அப்பர் கிளாப்டன் பள்ளி, எதிர்வரும் 2023-ல், தனது 160 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது அங்குள்ள பள்ளி ஆசிரியர்களுக்கே அதன் பெருமையும், தொடங்கப்பட்டதன் உன்னதமான நோக்கமும் தெரியாது. பள்ளியை நிர்வகிக்கும் தென்னிந்திய திருச்சபைக்குமே தெரியாது என்பது பெரும் சோகம். அழகிய மர வேலைப்பாடுகளுடன் தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்புடன் விளங்கும் பள்ளிக் கட்டடம், காலத்தால் பொலிவிழந்து இருக்கிறது. மீண்டும் பொலிவு பெற்று தலை நிமிர அதனை சீர் செய்வது அவசியம்.

இதையும் படிங்க: ’நாளை நம் கையில் இல்லை’- இரண்டு கால்களையே, கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.