கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதனடிப்படையில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்களின் அத்தியாவசிய தேவைகளில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், பால், காய்கறிகள், இறைச்சி ஆகியவை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுவருகிறது.
அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு உழவர் சந்தைகள் பூட்டப்பட்ட நிலையில் வேளாண் துறை சார்பில் மாநகராட்சி பூங்காக்களில் தற்காலிக உழவர் சந்தைகள் இயங்கிவருகின்றன.
இவை, காலை 7 மணிமுதல் 10 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வியாபாரிகளுக்கு இடைவெளிகளை அதிகப்படுத்தியும், பொருள்கள் வாங்க வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியிட்டு வரையப்பட்டுள்ள வட்டத்தில் நின்றும் காய்கறிகள் வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்திருப்பது வரவேற்கதக்கதாகவும், காய்கறிகளின் விலை சற்று அதிகமாக காணப்படுவதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: 'இதெல்லாம் நல்ல பேசுறீங்க, சட்டத்தை மட்டும் மதிக்க மாட்றீங்க' வெயிலில் நிறுத்திய போலீஸார்!