ETV Bharat / state

ஆண் வாரிசு இல்லையென சித்ரவதை! - கணவன் மீது புகார் - Male dominance

திருநெல்வேலி: ஆண் வாரிசு இல்லை என்று தனது கணவர் முத்துக்குமார் தன்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாகவும், கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் பாதுகாப்புக் கேட்டு சொர்ணலெட்சுமி என்ற பெண் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

torturer
author img

By

Published : May 27, 2019, 2:12 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் சொர்ணலெட்சுமி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் ஆண் வாரிசு வேண்டும் என்று கணவர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்துவிடுமோ என்ற பயத்தில் சொர்ணலெட்சுமி குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். இது அவரது கணவர் முத்துக்குமாருக்கு பிடிக்கவில்லை, இனி ஆண் வாரிசைப் பெற முடியாது என்ற கோபம் அதிகரித்திருக்கிறது.

அதன்பிறகு மது அருந்திவிட்டு வந்து அதிகமாக சித்ரவதை செய்ததால், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் துறையிலும் சொர்ணலெட்சுமி மனு அளித்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி, முத்துக்குமார் அந்த மனுவை வாபஸ் வாங்க வைத்துள்ளார். குழந்தைகளுக்கு ஆபத்து என்பதால், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வந்து சொர்ணலெட்சுமி வசித்து வந்திருக்கிறார். அங்கேயும் வந்து வீட்டை அடித்து நொறுக்கி பிரச்னை செய்து, கொலை செய்ய முயற்சி செய்ததால், மூன்று பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சொர்ணலெட்சுமி கண்ணீர் மல்க மனு அளித்தார்.

torturer
சித்ரவதை செய்த முத்துக்குமார்

இது குறித்துப் பேசிய சொர்ண லெட்சுமி, "எனக்கு ஆதரவு தரும், உடன்பிறந்த சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் என் கணவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் என் மூன்று பெண் குழந்தைகளுடன் பலமுறை தற்கொலை முயற்சி செய்தேன். ஆனால் பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து அந்த முயற்சியை கைவிட்டு விடுவேன். எனது பிள்ளைகள் நன்றாக படிக்கக் கூடிய பிள்ளைகள், எனது கணவரின் தொந்தரவு இல்லாமல் எனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளேன்" என தெரிவித்தார்.

ஆண் வாரிசு இல்லை என்று தனது கணவர் முத்துகுமார் என்பவர் தன்னை அடித்து துன்புறுத்தி சித்தரவதை படுத்துவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு தனது 3 பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சொர்ணலெட்சுமி என்ற பெண் கண்ணீர் மனு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர்  சொர்ணலெட்சுமி, இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்துகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது. ஆனால் கணவர் ஆண் வாரிசு வேண்டும் என்று தொடர்ந்து அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்து வந்துள்ளார். 4 வதும் பெண் குழந்தையாக இருந்து விடுமோ என்ற பயத்தில் சொர்ணலெட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார்.  அது கணவருக்கு பிடிக்காத நிலையில் ஆண் வாரிசு இல்லை என சிறிது சிறிதாக சித்தரவதை செய்ய ஆரம்பித்து உள்ளார்.  தற்போது மது அருந்திவிட்டு வந்து சித்ரவதை அதிகமானதால் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திலும் காவல் துறையிலும் மனு அளித்து உள்ளார். இந்த நிலையில் அந்த மனுவை குழந்தைகளை  கொலை செய்து விடுவேன் என மிரட்டி வாபஸ் வாங்க வைத்து உள்ளார். அதன் பின்னர் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வந்து வசித்து வரும் நிலையில் அங்கேயும் வந்து வீட்டை அடித்து நொறுக்கி பிரச்சினை செய்து கொலை செய்ய தேடிக் கொண்டு இருக்கும் நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகள் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்ணீர் மல்க மனு அளித்தார். இது குறித்து சொர்ண லெட்சுமி கூறும் பொழுது, எனக்கு  ஆதரவு தரும், உடன்பிறந்த சகோதர்களையும்  உறவினர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்.  இதனால் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் பல முறை சாவுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து இது போன்ற முயற்சி எடுக்க மனமில்லை. எனது பிள்ளைகள் நன்றாக படிக்க கூடிய பிள்ளைகள், எனது கணவரின் தொந்தரவு இல்லாமல் எனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

பேட்டி . சொர்ணலெட்சுமி ( பாதிக்கப்பட்ட பெண்)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.