ETV Bharat / state

விபத்தில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழப்பு! - thirunelveli district news

திருநெல்வேலி: சிவந்திபுரம் அருகே விபத்தில் சிக்கி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவி உயிரிழப்பு
கணவன்-மனைவி உயிரிழப்பு
author img

By

Published : Mar 8, 2021, 8:29 PM IST

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (56). இவர் இன்று (மார்ச் 8) தனது மனைவி அன்னபாக்கியம், பேத்தி ஸ்டெர்லிங் ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சேரன் மகாதேவி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சேரன் மகாதேவி அருகே வந்தபோது எதிரே வந்த கனரக வாகனம் எதிர்பாராதவிதமாகச் சுந்தரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சுந்தர், அன்னபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த சுந்தரின் பேத்தி ஸ்டெர்லிங்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனே சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிறகு இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் டிஜிபி அலுவலக ஊழியர் சந்தேக மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.