திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இவரது தந்தை மாணவனை விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பாக மாணவனின் தந்தை அவனிடம் விசாரித்தபோது, விடுதி வார்டன் அவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவரை மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளி வார்டனை, பள்ளி நிர்வாகம் நேற்று (ஜூலை 14) சஸ்பெண்ட் செய்தது.
மேலும் இது தொடர்பாக விசாரணை மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பள்ளி விடுதியில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வார்டனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Viral audio - கல்லூரி மாணவியிடம் மிரட்டல் தொனியில் பேசிய காவலர் மீது புகார்