திருநெல்வேலி: நவ. 02 ஆம் தேதி காலை முதல் நெல்லையில் சற்று வெயில் காணப்பட்டது. பின்னர், மாலை மீண்டும் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக, தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஏற்கனவே நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகள் ஏறத்தாழ உச்ச நீர் நிலையை எட்டியுள்ளன.
நீர்மட்டம் உயர்வு
நவ. 02 ஆம் தேதி நிலவரப்படி, நான்கு மாவட்டங்களின் ஜீவாதார அணையாக விளங்கும், பாபநாசம் அணை தனது முழுக் கொள்ளளவான 143 அடியில் 136 அடி நீருடனும், சேர்வலாறு அணையின் முழு நீர்மட்டம் ஆன 156 அடியில் 138 அடி நீருடனும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து, பாதுகாப்பு கருதி ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 43.8 மிமீ மழையும், குறைந்தபட்சமாக பாபநாசம் பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
தென்காசியில் மழை
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. அதிகபட்சமாக, அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் 15 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக கருப்பாநதி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் 4 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. மழையால், தீபாவளி விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சிரமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரவுடிகளை ஒடுக்க 'மகாகோ': அதிரடி காட்டும் புதுச்சேரி அமைச்சர்