Dhoti Day: வேட்டி கட்டுவதை ஊக்குவிக்கும்விதமாக ஜனவரி 6ஆம் தேதி 'வேட்டி நாள்' எனக் கொண்டாடப்படுகிறது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேட்டி கட்டிக்கொண்டு இந்த தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணி செய்யும் ஒட்டுமொத்த அலுவலர்களும் வேட்டி அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகம் முன்பு ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!