தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணியை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், மதுரை கோட்ட மேலாளர் பி.ஆர். லெனின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரயில்வே தண்டவாள உறுதித்தன்மை, தொழில்நுட்பப்பிரிவு, சுகாதாரப்பணிகள், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், 'புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல், தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதன் தீர்வுக்கு பின்னரே புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமாகும்' என்றார்.
மேலும், '2022ஆம் ஆண்டுக்குள் செங்கோட்டை, புனலூர் பாதை மின்மயமாக்கம் பணி முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அரியலூர்-திருச்சி ரயில் தடத்தில் மின்மயமாக்கும் பணி: ரயில்வே அலுவலர் தகவல்