ETV Bharat / state

ஆன்லைன் தேர்வு: செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ. அலையும் மாணவி

ஆன்லைன் தேர்வு எழுத நாள்தோறும் 16 கி.மீ. நடந்துசெல்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரம்யா என்கிற மாணவி. 5 ஜி இணைய வேகம் குறித்து விவாதம் நடந்துவரும் சூழலில், கடைக்கோடியில் கல்வி என்னும் பெரும் கனவைச் சுமந்துவரும் அவருக்கு இந்தப் பெருந்தொற்று காலத்தில் இணையத்தை அணுகுவதுதான் பெரிய சவாலாக இருக்கிறது.

girl-student-face-to-get-cellphone-tower-for-online-exam
ஆன்லைன் தேர்வு...செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ அலையும் மாணவி
author img

By

Published : Jun 30, 2021, 7:59 AM IST

Updated : Jul 2, 2021, 9:55 PM IST

திருநெல்வேலி: கரோனா பெருந்தொற்று காலத்தில் இணையப் பயன்பாடு பெருகியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்குப் பாடங்களை இணையவழியில் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இணையவழியில் மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சிக்கல்கள், பயன்கள் குறித்து ஒருபுறம் விவாதம் நடந்துகொண்டிருக்க இந்தியாவின் தென்மூலையில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு பகுதியில் மாணவி ஒருவர் இணைய வழிக் கல்வியைப் பெறவும், இணையவழித் தேர்வுகள் எழுதவும் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, இஞ்சிகுழி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கானி இன பழங்குடி மக்கள் வசித்துவருகிறார்கள்.

செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ. அலையும் மாணவி

செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ. நடைபயணம்

இந்த கானி சமூகத்தைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவி, பாபநாசம் பகுதியில் இளங்கலைப்பட்டம் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தற்போது, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவதால், இவர் தேர்வு எழுத தனது ஊரிலிருந்து 16 கி.மீ. தூரம் கீழே இறங்கிவரும் சூழல் உள்ளது.

சேர்வலாறு பகுதியில் செல்பேன் சிக்னல் அறவே கிடைக்காது. ஆகையால், தனது ஆன்லைன் தேர்வுகளை 16 கி.மீ. தூரம் நடந்துவந்து லோயர் கேம்ப் பகுதியில் சிக்னல் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து எழுதுகிறார்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் எந்த விலங்கு எப்போது எதிரே வரும் எனத் தெரியாத நிலையில், தனது தந்தையையோ அல்லது தனது அண்ணனையோ உடன் அழைத்துவருகிறார் ரம்யா.

girl-student-face-to-get-cellphone-tower-for-online-exam
மாணவி ரம்யா

கல்வி என்னும் பெருங்கனவு

ரம்யா நிம்மதியாகத் தேர்வு எழுத வேண்டும் என்று தங்களது வேலைகளை விட்டு அவருடன் லோயர் கேம்பில் தேர்வு எழுதி முடிக்கும்வரை காத்திருந்து திரும்ப அழைத்துச் செல்கின்றனர் ரம்யாவின் அண்ணணும் தந்தையும். இப்பகுதியிலேயே கல்லூரி படிப்பை படிக்கும் மாணவி ரம்யாதான். இவர், தன்னைப்போல் பள்ளி மாணவர்கள் சிலரும் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறார்.

மேலும், "பெரும் கனவுடன் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு கல்வியைப் பெறுவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக செல்போன் சிக்னல் கிடைக்க எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்போன் டவர் வைக்க சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்க உதவும் வகையில், குறைந்த அதிர்வெண் கொண்ட செல்போன் டவர்களையாவது அமைக்க முன்வர வேண்டும்" என்கிறார்.

செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ அலையும் மாணவி

அடிப்படை வசதி இல்லாத அவலம்

தங்கள் ஊருக்கு காலை, மாலை என இருவேளைகளில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகத் தெரிவிக்கும் ரம்யாவின் அண்ணன் இசக்கி, தற்போதைய கரோனா அச்சத்தால் அந்தப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என்கிறார்.

தங்கையின் தேர்வுகளுக்காக தங்களது வேலைகளை விட்டுவிட்டு வரவேண்டிய சூழல் உள்ளதாகவும், அரசு தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கிறார் இசக்கி.

பல ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்துவருவதாகத் தெரிவித்த ரம்யாவின் தந்தை, எங்கள் குழந்தைகள் கல்வி கற்பதற்குப் பெரும் சிரமப்படுவதாகவும், தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் இணையதள வசதி இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டி உள்ளதாகவும் கவலை கொள்கிறார்.

கானி பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதி

செல்போன் டவர் அமைப்பதில் சிக்கல்

வன உயிரினங்கள் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இங்கு செல்போன் டவர் அமைக்கப்படவில்லை எனவும், இது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சேர்வலாறு பகுதி மக்கள் செல்பேன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருகின்றனர்.

அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த லதா, "கானி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அரசு செய்துகொடுப்பதில்லை. சிலர் மனிதாபிமானத்தோடு எங்களுக்கு சில உதவிகளைச் செய்தனர்.

அரசு போதிய அடிப்படை வசதிகளை எங்களுக்கு செய்துகொடுக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக குறைந்த அதிர்வெண் கொண்ட செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ரம்யாவின் அண்ணண்(இடது), ரம்யாவின் தந்தை(வலது)

டிஜிட்டல் இந்தியா

'டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்துடன் செயல்படும் ஆட்சியாளர்களின் காதில், செல்போன் சிக்னலுக்காக 16 கிலோமீட்டர் தூரம் அலையும் மாணவிகளின் குரல் கேட்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: சாலையோரங்களில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதும் அவலம்!

Last Updated : Jul 2, 2021, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.