ETV Bharat / state

யோகாவில் புதிய உலக சாதனை - 29 கடின ஆசனங்களை செய்து அசத்திய சிறுமி

யோகாவில் புதிய உலக சாதனை படைப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு 29 கடின ஆசனங்களை செய்து 11 வயது சிறுமி அசத்தியுள்ளார்.

author img

By

Published : Jul 8, 2021, 12:42 PM IST

யோகாவில் சாதனை படைத்த சிறுமி
யோகாவில் சாதனை படைத்த சிறுமி

திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி தேவிப்பிரியா. இவர்களது மகள் பிரிஷா (11). இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பிரிஷா யோகா மீது உள்ள ஆர்வத்தால் தனது குழந்தை பருவத்திலிருந்தே பல்வேறு கடினமான யோகா ஆசனங்களை செய்து வருகிறார்.

இதன் பலனாக சிறுமி பிரிஷா இதுவரை 41 உலக சாதனைகளை புரிந்துள்ளார். மேலும், உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். அதேபோல் உலகின் முதல் இளம் கௌரவ மருத்துவர் என்னும் பட்டத்தை நியூஜெருசேலம் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

இலவசமாக யோகா வகுப்பு

இதுபோன்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள பிரிஷா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்து வருகிறார். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காவல் துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார்.

யோகாவில் சாதனை படைத்த சிறுமி

இவரின் திறமையை கண்டு வியந்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிசயத்தக்க தனித்திறமையுள்ள குழந்தை என்று பாராட்டியிருந்தார். இதுபோன்று சாதனைகளின் மகுடமாய் திகழ்ந்து வரும் சிறுமி பிரிஷா, தற்போது யோகாவில் புதிய உலக சாதனை படைப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு 29 கடின ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார்.

கடின ஆசனங்கள் செய்து அசத்திய சிறுமி

அமெரிக்காவிலுள்ள எலைட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் பிரிஷா பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு நெல்லையிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மனோன்மணியம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சேது, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியதுரை, சிவராமன் ஆகியோர் முன்னிலையில் சிறுமி பிரிஷா 29 ஆசனங்களை செய்து காட்டினார்.

அதன்படி கண்களை கட்டிக்கொண்டு கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூப் சரிசெய்வது, கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிவேகமாக பிரைன் விட்டாவை சரி செய்வது, கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கையில் தரையில் தட்டுவது உள்ளிட்ட 29 கடினமான ஆசனங்களை செய்து யோகாவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

யோகாவில் புதிய உலக சாதனை

மேலும், உலக சாதனைக்காக எலைட் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை விட சிறுமி பிரிஷா இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆசனங்களையும் செய்துள்ளார். பிரிஷாவின் இந்த சாதனைகளின் வீடியோ ஆவணங்கள், எலைட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் யோகாவில் புதிய உலக சாதனை படைத்த முதல் சிறுமி என்ற பட்டத்தை எலைட் நிறுவனம் பிரிஷாவுக்கு வழங்க இருக்கிறது.

உலக அளவில் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு யோகாவில் இதுபோன்று கடினமான ஆசனங்களை யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த சாதனைகளை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிப்பதா பிரிஷா பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'யோகா நேபாளத்தில் உருவானது' - சர்மா ஒலி சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.