ETV Bharat / state

'குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்... முதலமைச்சர் அறிவிப்பார்' - nellai latest news

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக நிதி நிலைக்கு ஏற்ப முடிவுசெய்து முதலமைச்சர் அறிவிப்பார் என உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

food-supply-department-officers-review-meeting-in-nellai

author img

By

Published : Jul 14, 2021, 8:34 PM IST

நெல்லை: தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பொது விநியோகத் துறைத் திட்டங்கள், புதிய குடும்ப அட்டை வழங்குவது, பெயர் மாற்றம், நீக்கல் தொடர்பான பணிகள், கரோனா நிவாரணம் வழங்குதல், அரசால் வழங்கப்பட்டுவரும் 14 வகை மளிகைப்பொருள்கள் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

மேலும், தற்போது நடைபெற்றுவரும் கார் சாகுபடி மூலம் கிடைக்கப்பெறும் நெல்லை பெறத் தேவையான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஞான திரவியம் கலந்துகொண்டனர்.

15 நாள்களில் குடும்ப அட்டை

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அர. சக்கரபாணி, "மக்களுக்கு எளிமையான முறையில் பொருள்கள் கிடைக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேல் குடும்ப அட்டைகள் உள்ள கடைகளைப் பிரித்து அந்தக் கடைகளை பகுதி நேரக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தால் 15 நாள்களில் அதனை வழங்கிட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதன் காரணமாக இந்தத் திட்டம் விரைவுபடுத்தப்படாமல் இருந்தது.

ஜூலை 1ஆம் தேதிமுதல் இந்தத் திட்டம் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு 15 நாள்களில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தால் அதனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

சொந்த கட்டடங்களில் ரேஷன் கடை

தமிழ்நாடு முழுவதும் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை இரண்டு ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் புதிய குடும்ப அட்டை தேவைப்படுவோருக்கு முகாம் நடத்தி விண்ணப்பங்களைப் பெற்று குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மண்டலத்திற்கு ஒரு காவல் கண்காணிப்பாளர்

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வழியாக நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தற்போது இரண்டு கண்காணிப்பாளர் மட்டுமே இருக்கின்றனர்.

இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவை தமிழ்நாட்டில் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு ஒரு காவல் கண்காணிப்பாளர் வீதம் நியமனம்செய்யப்படவுள்ளது.

உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி

குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய்

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நிதி நிலைக்கு ஏற்ப முடிவு செய்து முதலமைச்சர் அறிவிப்பார்.

அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி, உணவுப் பொருள்களைக் கடத்தி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கொண்டுசெல்வதைத் தடுக்க துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடல் வழியாக அரிசி, மண்ணெண்ணெய் பொருள்கள் கடத்தப்படுவதாகத் தகவல் வருகிறது. அதனையும் தடுக்க துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.