ETV Bharat / state

மழைநீரில் மூழ்கி 5000 கோழிகள் உயிரிழப்பு - வள்ளியூரில் 5000 கோழிகள் உயிரிழப்பு

வள்ளியூரில் கோழிப் பண்ணைக்குள் மழை வெள்ளம் புகுந்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தன.

மழைநீரில் மூழ்கி கோழிகள் உயிரிழப்பு
மழைநீரில் மூழ்கி கோழிகள் உயிரிழப்பு
author img

By

Published : Nov 18, 2021, 9:50 PM IST

திருநெல்வேலி: வள்ளியூர் அருகே உள்ள தலைவர்மனை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்சன். இவர் துலுக்கர்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆனைகுளம் பகுதியில் கோழி பண்ணை வைத்து நடத்திவருகிறார். நேற்று (செ.18) மாலை வள்ளியூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் துலுக்கர்பட்டியில் இருந்து ஆனைகுளம் செல்லும் கால்வாயில் நள்ளிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீர் கால்வாயில் உள்ள தடுப்பணையில் மோதி அருகிலிருந்த கோழிப்பண்ணைக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்கு இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் 3 அடி தண்ணீரில் மூழ்கி அனைத்தும் உயிரிழந்தன.

மழைநீரில் மூழ்கி கோழிகள் உயிரிழப்பு

காலையில் கோழிப்பண்ணை உரிமையாளர் வில்சன் கோழிப்பண்ணைக்கு வந்து பார்த்தபோது அனைத்துக் கோழிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வள்ளியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராக நிலையில் இருந்த கோழிகள் உயிரிழந்து இருப்பதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.