நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தனியாருக்குச் சொந்தமான வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் குடோன் அமைந்துள்ளது. அங்குக் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றிரவு (ஆக. 2) இரவு இந்தக் குடோனில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர், சேரன் மகாதேவி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் கட்டில், மெத்தை உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
மேலும் அம்பாசமுத்திரம் காவல் துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென தீப்பிடித்த அரசு வாகனம்: உயிர் தப்பிய ஊராட்சி குழுத் தலைவர்