ETV Bharat / state

நெல்லையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தீவிரம்! - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 மணி முதல் 6 மணி வரை வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

நெல்லையில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்

author img

By

Published : Oct 6, 2021, 6:54 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 621 மையங்களில் நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவில் காலை முதல் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

மாலை 3 மணி நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தில் 52.01 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்

இருப்பினும் கரோனா நோயாளிகள் அதிகளவில் வராததால், 6 மணிக்கு முன்பு வந்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்களிக்க அனுமதி மறுப்பு - பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.