ETV Bharat / state

வயலில் தீ: மக்கள் அவதி - cultivation

நெல்லை: வயல்வெளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு குடியிருப்பு பகுதியை புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

vayal
vayal
author img

By

Published : Jul 21, 2021, 11:47 PM IST

நெல்லை ஸ்ரீபுரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளியில் இன்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மரம் மற்றும் காய்ந்த செடிகளில் தீ மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் அருகில் இருந்த பிஎஸ்என்எல் அலுவலக குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.

பின்னர் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரசு மரம் உள்பட இரண்டு மரங்கள் முற்றிலும் தீயில் கருகி நாசமாகின. இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.