திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கட்டட ஒப்பந்ததாரரான இவரை சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
பாளையங்கோட்டை சிறைக்கைதி முத்து மனோ, அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே, இந்தக் கொலை சம்பவம் அறங்கேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
பிரபல ரவுடி கைது
முத்து மனோ கொலையில் தொடர்புடைய ஜேக்கப்பின், நெருங்கிய உறவினர்தான் கண்ணன். இதன் காரணமாகவே கண்ணன் கூலிப்படை ஏவி கொலைசெய்யபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து விசாரிக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகள் பலர், களக்காடு மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் அந்தப் பகுதியை காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதுவரை எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (ஜூலை 31) தச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கண்ணபிரான் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இரு வேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக அரங்கேறிய கொலை வழக்கில், பிரபல ரவுடி கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு: சிசிடிவி வைரல்