ETV Bharat / state

நெல்லை அறிவியல் மையம் உள்பட 26 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Thirunelveli Science Centre Bomb Threat: இமெயில் மூலம் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை அறிவியல் மையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 5:33 PM IST

நெல்லை அறிவியல் மையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி: இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின் தலைமையிடமாக கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் அறிவியல் மையத்தின் தலைமை அலுவலகத்திற்கும், பெங்களூருவில் உள்ள அறிவியல் மைய அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அதில், இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தற்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன், 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, நெல்லையில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்த சோதனை இன்று முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மையம், கருவிகள் உள்ள அறைகள் பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய அதிகாரி கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அறிவியல் மையத்தின் தலைமையகத்திற்கு வந்த மின்னஞ்சலில் வந்த தகவல் தவறான தகவல். மழை வெள்ளத்தால் அறிவியல் மையம் சேதமடைந்துள்ளதால், அதற்கான சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவியல் மையம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ஜன.21-இல் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.