ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தரும் வாக்குறுதியை நம்பிடாதீங்க!' - nellai latest news

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைத் தந்ததைபோல உள்ளாட்சித் தேர்தலில் திமுக தரும் வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார்.

ex-admk-minister-valarmathi-press-meet-in-nellai

author img

By

Published : Aug 27, 2021, 10:44 AM IST

Updated : Aug 27, 2021, 11:19 AM IST

நெல்லை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணிச் செயலாளருமான பா. வளர்மதி தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் அணி நிர்வாகிகள் செயல்பட வேண்டிய விதம், பொறுப்பாளர்கள் நியமனம் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய பா. வளர்மதி, ”கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததைப்போல உள்ளாட்சித் தேர்தலில் தரும் வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம் என மகளிர் அணி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளோம்.

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் திமுக

50 விழுக்காடு பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறோம். திமுக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்களா என மக்களுக்குத் தெளிவாகப் புரியும்.

அனைத்துப் பிரச்சினைகளையும் திமுக காழ்ப்புணர்ச்சியுடன்தான் அணுகிவருகிறது. வழக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மூலம் அதிமுகவை அடக்கி ஒடுக்கும் நிலைப்பாட்டை திமுக எடுக்கிறது. திமுகவினர் ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சும் சொல்கிறார்கள்.

திமுகவினர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கஜானாவை காலி செய்துவிடுவார்கள். நிதிப்பற்றாக்குறை அப்படின்னு செல்லுவார்கள். அதே அதிமுக ஆட்சிக்கு வரும்போது எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை எனப் போராட்டம், வழக்கு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இதுவே திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இது எங்களுக்குப் புதிதல்ல.

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி

எதையும் செயல்படுத்தாத திமுக

எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொட்டு ஆட்சிக்கு வந்தபின் ஒரு செயல்பாடும், மறுமுனை ஒரு செயல்பாடும் என இருப்பது திமுகவின் வாடிக்கை. மூன்று மாத திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும். மக்கள் தக்க பதிலடியை திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் வழங்குவார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சொல்லிவிட்டு எதையும் செயல்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக என்னும் பெரிய கட்சியின் எளிய 'தொண்டர்' - மதனின் ஆடியோவுக்குப்பின் அண்ணாமலை போட்ட ட்வீட்

Last Updated : Aug 27, 2021, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.