ETV Bharat / state

முக்கூடல் அருகே வளர்ப்பு யானை உயிரிழப்பு - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: தனியார் வளர்த்து பராமரித்து வந்த யானை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

dead elephant
உயிரிழந்த லட்சுமி யானை
author img

By

Published : Oct 18, 2020, 3:45 PM IST

தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த ரவணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தாவூத் மீரான் (50). இவர் லட்சுமி என்ற 54 வயது பெண் யானையை கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வுகளுக்கு யானையை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில், அவர் யானை லட்சுமியை அழைத்துக்கொண்டு நேற்று (அக்.,17) திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் உள்ள முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயில் அருகில் உள்ள ஆற்றில் யானை குளிக்க வைத்து இரவு உணவு கொடுத்து விட்டு யானையுடன் அங்கேயே தங்கியுள்ளார்.

வழக்கம்போல இன்று காலை எழுந்து யானையைச் சென்று பார்த்த போது யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதைக் கண்டு தாவூத் மீரான் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் முக்கூடல் காவல் துறையினர் திருநெல்வேலி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

dead elephant
உயிரிழந்த லட்சுமி யானை

திருநெல்வேலி வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆலங்குளம் கால்நடை உதவி இயக்குநர் ஜான் சுபாஷ், முக்கூடல் கால்நடை மருத்துவர்கள் முயல்வி, சிவமுத்து ஆகியோர் அடங்கியக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பரிசோதித்து யானை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் யானை லட்சுமிக்கு அதே இடத்தில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து யானை எப்படி உயிரிழந்தது? என தாவூத் மீரானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:யானை உயிரிழப்பு: வனத்துறையினரின் அலட்சியம்தான் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.