ETV Bharat / state

'நான் கலைஞர் மாதிரி பேசுவேன்...' - மனு அளிக்க வந்த திமுக பிரமுகரால் சிரிப்பலை - tamil latest news

'நான் கலைஞர் மாதிரி பேசுவேன்...பராசக்தி வசனம் போல் மனு எழுதி வந்துள்ளேன்’ என நெல்லை மாநகராட்சி குறைதீர் முகாமில் மேயர் முன்பு சினிமா வசனம் போல், குறைகளைத் தெரிவித்த திமுக பிரமுகரால் சிரிப்பலை எழுந்தது.

மனு அளிக்க வந்த திமுக பிரமுகரால் மாநகராட்சியில் சிரிப்பலை

author img

By

Published : Dec 15, 2022, 5:06 PM IST

மனு அளிக்க வந்த திமுக பிரமுகரின் வீடியோ

திருநெல்வேலி: என்ஜிஓ காலனியைச் சேர்ந்த முதியவர் பழனி. இவர் திமுகவில் இருந்து வரும் நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், மேயர் சரவணனிடம் மனு அளிப்பதற்காக வந்தார்.

அப்போது மேயர் முன்பு நின்று கொண்டு சினிமாவில் வசனம் பேசுவது போன்று, அரசியல் கலந்து நகைச்சுவையாக தனது குமுறலை வெளிப்படுத்தியது அரங்கில் சிரிப்பலையினை ஏற்படுத்தியது. பழனி பேசுகையில், ”யாரை கேட்டாலும், மேயரை பாருங்கள்... மேயரை பாருங்கள், கலெக்டரை பாருங்கள் என்கிறார்கள்... நிலைமை மோசமாக உள்ளது. உங்களிடம் இரண்டு நிமிடம் பேச வாய்ப்புக் கொடுங்கள்.

நான் கலைஞர் மாதிரி பேசுவேன். பராசக்தி வசனம் மாதிரி மனு எழுதி வந்துள்ளேன். நான் கலைஞரிடம் 15 நாட்கள் உறவாடியவன். என்னிடம் கலைஞர் பவர் இருக்கு. மேயர், துணை மேயர் பவர் இருக்கு. ஆனால், மாவட்டச் செயலாளர் எனக்கு அதிகாரம் தரவில்லை. கலைஞரும் எனக்குத் தரவில்லை.

அவரது மகன் முதலமைச்சர் ஸ்டாலின் ’சொல்வதைத் தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன்’ என்று பேசுவார். அவரைப் போன்று எனக்கு செய்து தாருங்கள். நான் சில ரகசியங்களை உங்களிடம் கூறுகிறேன். உங்களைக் கண்டு சிலர் பயப்படுகிறார்கள். நான் உங்களுக்கு சிஐடியாக வருவேன். உங்கள் பின்னால் வருவேன்” என்று உடல் பாவனையோடு நகைச்சுவையாகப் பேசினார்.

இதனால் பரபரப்பாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் பழனியின் இந்தப் பேச்சை அமைதியாக கேட்டு ரசித்தனர். பின்னர் அதைத்தொடர்ந்து முதியவர் மேயரிடம் மனுவை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளையராஜா வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.