ETV Bharat / state

சர்ச்சையில் சிக்கிய நெல்லை திமுக எம்பி: நடந்தது என்ன? - லேட்டஸ்ட் செய்திகள்

திருநெல்வேலி: திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாஜக பிரமுகர் பாஸ்கரை தாக்கியதாகவும், ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞான திரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். அப்போது அவர் காவல் நிலையத்தில் தரையில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

திமுக எம்பி ஞானதிரவியம்
திமுக எம்பி ஞானதிரவியம்
author img

By

Published : Oct 11, 2021, 7:40 PM IST

நெல்லை மாவட்டம், வள்ளியூரை அடுத்த ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர், நேற்று முன்தினம் (அக்.9) காவல்கிணறு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்தச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் பாஸ்கரை தாக்கியதாகவும், பின்னர் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாஜக பிரமுகர் பாஸ்கரை அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (அக்.9) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தரையில் படுத்துப் போராடிய பொன். ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, திமுக எம்பி ஞானதிரவியம் மீது சட்டப்பிரிவு 370இன் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிந்து அவரை கைது செய்யக் கோரி, நேற்று நள்ளிரவு நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து பொன். ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன், நெல்லை சந்திப்பு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து இன்று (அக்.11) அதிகாலை காவல் துறையினர் அவரை விடுவித்தும்கூட எம்பி ஞானதிரவியத்தை கைது செய்யும்படி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அறையில் பொன் ராதாகிருஷ்ணன் குளிரில் போர்வையை போர்த்திக் கொண்டு தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தைக் கைவிட்டு திரும்பினார்.

சிக்கலில் திமுக எம்பி

இதனிடையே, பாஜகவினரின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் திமுக எம்பி ஞானதிரவியம், அவரது மகன்கள் தினகரன், ராஜா ஆகியோர் உள்பட 30 பேர் மீது பணகுடி காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவுச் செய்தனர்.

இருப்பினும் பாஜகவைச் சேர்ந்த சாதாரண நிர்வாகி ஒருவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக மோதி தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் 10 ஆண்டு கால பகை

மேலும் இதன் பின்னணியில் 10 ஆண்டுகால பகை இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, பாஜகவின் அதி தீவிர தொண்டரான பாஸ்கர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இதே 12ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய எம்பி ஞான திரவியத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போதிருந்தே இருவருக்கும் பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் 12ஆவது வார்டு உறுப்பினருக்கு பாஜக சார்பில் நிமிதா சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் எம்பி ஞான திரவியத்தின் மிக நெருங்கிய உறவினரான மல்லிகா அருள் போட்டியிடுகிறார்.

பிரச்சினையில் முடிந்த பரப்புரை விமர்சனம்...

இவர் ஏற்கனவே 1996இல் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக இருந்துள்ளார். மேலும் ஆவரைக்குளம் என்பது கன்னியாகுமரி எல்லைப் பகுதி. இங்கு நான்கு கவுன்சிலர் இடங்களுக்கு அதிமுக கூட்டணியில் பாஜகவினர் போட்டியிடுகின்றனர். எனவே எம்பி ஞானதிரவியத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஸ்கர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்லும் இடங்களில் எல்லாம் பாஸ்கர் திமுக எம்பி ஞானதிரவியம் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

குறிப்பாக ஞான திரவியம் தொகுதி மக்களுக்காகவும் அவர் சார்ந்த பகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஞான திரவியம் பாஸ்கர் மீது கடும் கோபம் அடைந்துள்ளார்.

ஓட்டலில் வெடித்த தகராறு

இந்தச் சூழலில்தான் நேற்று முன்தினம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஓட்டலில் பாஸ்கர் உணவு அருந்திக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு எம்பி ஞான திரவியம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்று பேசியுள்ளார். அப்போது தேவையில்லாமல் பரப்புரையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேச வேண்டாம் என பாஸ்கரை அவர் எச்சரித்ததாகவும், அதற்கு பாஸ்கர் அப்படித்தான் பேசுவேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எம்பி ஞான திரவியம் பாஸ்கரை சட்டையைப் பிடித்து கீழே தள்ளி விட்டதாகவும், இதில் பாஸ்கருக்கு லேசான காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்தத் தகவலை அறிந்த பாஜக மேல்மட்டம், இவ்விஷயத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலை பாஜக மேல்மட்ட நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரச்னையை கையில் எடுத்த பாஜக மேல்மட்டம்

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய அளவில் காயம் இல்லை என்றும் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறியுள்ளனர். எனினும் கட்சி நிர்வாகிகளின் அழுத்தம் காரணமாக பாஸ்கர் டிஸ்சார்ஜ் ஆக மறுத்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் தான் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று (அக்.11) மாலை பாஸ்கரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர், பாஸ்கரை காப்பாற்றுவதை விட அவரைத் தாக்கிய திமுக எம்பியைக் காப்பாற்றுவதில் தான் மருத்துவமனை நிர்வாகம் அக்கறை காட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் பெரிதாவதை உணர்ந்த காவல் துறையினர், பணகுடி காவல் நிலையத்தில் திமுக எம்பி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

களம் இறங்கிய பொன் ராதாகிருஷ்ணன்...

இருப்பினும் பாஜக கூறியபடி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த விஷயத்தை மேலும் பெரிதாக்கும் வகையில் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நள்ளிரவு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாக கைதாகி, விடுதலை ஆகியுள்ளார்.

ஏற்கெனவே திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் பாஜகவுக்கு திமுகவை களங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்தாலும் கூட ஒரு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாதாரண வாய்த்தகராறுக்காக எதிர்க்கட்சி பிரமுகரை நேரடியாகச் சென்று தாக்கி, அதன் மூலம் சர்ச்சையில் சிக்கிய சம்பவம், நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவும் இந்த விஷயத்தை தொடர்ந்து பெரிதாக்கி வருவதால் திமுக எம்பி ஞான திரவியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எம்பியை கைது செய்ய முடியுமா?

பொதுவாக மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு 40 நாள்களுக்கு முன்பாக அல்லது கூட்டத்தொடர் முடித்து 40 நாள்கள் வரை கைது செய்ய முடியாது.

அதுவே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கைது செய்ய முடியும். ஆனால் கைதுக்கு முன்பாக சபாநாயகரிடம் சம்பந்தப்பட்ட எம்பியை ஏன் கைது செய்கிறார்கள், அவர் மீது என்னென்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவரை எங்கே சிறை வைக்கப் போகிறீர்கள் உள்ளிட்ட தகவலை காவல் துறையினர் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வலியுறுத்தும் ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.