நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஏர்வாடி பகுதியில் பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக திமுக இருந்து வருகிறது. பொடா சட்டம், முத்தலாக் உள்ளிட்ட சட்டத் திருத்தங்களை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆனால் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை, ஆனால் தற்போது நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துள்ளது. இதனால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: "தேசிய கொடியே பறக்கும், பாஜக கொடி பறக்காது" - தமிழ்நாடு பாஜக அறிவிப்பு