ETV Bharat / state

"காவி எங்கே இங்க வந்தது" - அரசு நிகழ்ச்சியில் பதறிய கனிமொழி.. நெல்லையில் நடந்தது என்ன?

திருநெல்வேலியில் நடந்த ஓவியம் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி விழாவில் ஓவியம் வரைவதற்காக கனிமொழியிடம் காவி நிற பெயிண்டை கொடுத்ததும் அவர் அதனை வாங்காமல் மறுத்துவிட்டு வேறு நிறத்தை தேர்வு செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 27, 2023, 5:50 PM IST

ஓவியம் பயிலரங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி

திருநெல்வேலி: குருவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் கலை பண்பாடுத்துறை சார்பில் நெல்லை பாளையங்கோட்டை மேற்கு கோட்டை பூங்காவில் இயற்கை வண்ண ஓவியம் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு ஓவியம் வரைந்து பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். முன்னதாக ஓவியம் வரையும் பலகை முன்பு பல வண்ணங்களில் பெயிண்ட் வைக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் அப்பாவு ஆரஞ்சு நிற பெயிண்ட் பிரஸ்ஸை எடுத்து கனிமொழியிடம் வழங்கினார்.

அப்போது, கனிமொழி, "எடுத்த உடனே ஆரஞ்சு கலர் கொடுக்கிறீர்களே" என்று சிரித்தபடி கேட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘அது பார்ப்பதற்கு காவி நிறம் போல் இருக்கிறது’ என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. அதாவது காவி என்றால் தற்போது திமுகவின் அரசியல் எதிரியாக கருதப்படும் பாரதிய ஜனதா கட்சியின் கொடியின் நிறங்களில் ஒன்றாகும். எனவே கனிமொழி அது வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் அவருக்கு பிறகு அருகில் இருந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ஓவியம் வரைய சொல்லி அவரிடம் பிரஸ்சை கொடுத்தனர். அவரும் தயங்கியபடியே ஆரஞ்சு நிறத்தில் கை வைத்தார். ஆனால், பலகையில் ஓவியம் எதுவும் வராமல் கையை மட்டும் ஆட்டிவிட்டு, "இது தான் ஆர்ட்" என்று கூறி சிரித்துக்கொண்டே நைஸாக நிழுவி விட்டார்.

இதையும் படிங்க: 5 வந்தே பாரத் ரயில் சேவைகள்... கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி!

அதாவது, மத்தியில் ஆளும் பாஜக கட்சி தொடர்ந்து தமிழ்நாட்டின் திமுக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கொள்கை ரீதியாக திமுகவும் பாஜகவும் தனித்தனி பாதையில் பயணிப்பதால் திமுக பாஜக தேர்தல் கூட்டணி என்பது கேள்விக் குறியாகியுள்ளது. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பாஜக கட்சியை முன்வைத்து தான் அரசியல் நடவடிக்கையை கையாண்டது.

அதேபோல் தமிழ்நாடு அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிடுப்பது பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் கூறி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. மேலும், செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு திமுக பாஜக மோதல் உச்சகட்டம் அடைந்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருக! - ஓபிஎஸ் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.