ETV Bharat / state

என்ன சார் வேலை நடக்குது? நெல்லை மேயரை திணறடித்த பெண் கவுன்சிலர் - Councilor

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் மேயரை பார்த்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி திணறடிக்க செய்த சம்பவம் நடந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 11:02 PM IST

நெல்லை மேயரை திணறடித்த பெண் கவுன்சிலர்

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று (டிச. 30) நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று மெஜாரிட்டியாக உள்ளது. இருப்பினும் நெல்லை மாநகர திமுகவில் நிலவி வரும் உள்கட்சி பூசல் காரணமாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை அவமரியாதையாக பேசும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக மாமன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக கோஷம் எழுப்புவதும் மேயரை கண்டித்து போராட்டம் நடத்துவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் சுதா என்பவர் மேயர் சரவணனை பார்த்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி திணறடிக்க செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் சுதா பேசும்போது, “எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. முதலில் எங்களுக்கு மரியாதை கொடுங்க. சார் பணம் எங்களுக்கு முக்கியமில்லை. பணத்துக்காக நாங்கள் இங்கே வரவில்லை. இங்குள்ள பெண் கவுன்சிலர்கள் எல்லாரும் புதிதாக வந்தவர்கள். ஏதோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தோம். ஆனால், எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. முதலில் எங்களை உட்கார சொல்லாதீர்கள். நாங்கள் பேசுவதை கேளுங்கள். அதற்காகத்தான் உங்களை வைத்துள்ளோம்.

நாங்கள் வீட்டில் வேலை இல்லாமல் இங்கே கிளம்பி வரவில்லை. நீங்கள் எதையும் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். எதற்காக நாங்கள் உட்கார வேண்டும். நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எங்களுக்கு பதில் சொல்லுங்க சார். இப்படி தலையை ஆட்டுவது தான் உங்கள் பதிலா” என்றார்.

அப்போது பேசிய மேயர் சரவணன், “இங்கே உள்ள அதிமுக உறுப்பினர்கள் கூட மிக அழகாக பொறுமையாக தங்கள் கோரிக்கையை கூறுகின்றனர். ஆனால் நீங்கள் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் இப்படி பேசாதீர்கள்” என்றார். அதற்கு மீண்டும் பேச தொடங்கிய சுதா, “யாருடைய தூண்டுதலின் பேரிலும் நாங்கள் பேசவில்லை. மேயர் ஆணையர் எல்லோரும் ஒரே இடத்தில் இங்கு தான் இருக்கிறீர்கள். நாங்கள் தனித்தனியாக ஒவ்வொரு முறையும் உங்கள் அலுவலகத்திற்கு வந்து சந்திக்க முடியாது. அது எங்களுக்கு தேவையில்லை.

நீங்கள் ஒழுங்காக இருந்தால் தான் அதிகாரிகள் வேலை செய்வார்கள். என்ன சார் வேலை நடக்குது எங்கள் பகுதியில்? நீங்கள் சொல்லுங்கள் சார்? மக்களை தேடி மேயர் என்கிறீர்கள், நாங்கள் இல்லாமல் மாநகராட்சி இல்லை. எனவே மக்களை தேடி மாநகராட்சி என்று கூறுங்கள். ஒன்பது கூட்டம் முடிவு பெற்றுள்ளது இதுவரை ஒரு முறையாவது ஆலோசனை கூட்டம் நடத்தினீர்களா” என்றார்.

இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்: தஞ்சை மேயர் வெளிநடப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.