திருநெல்வேலி: தமிழ்நாட்டிலேயே நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியமாகும். இது, 41 பஞ்சாயத்துக்கள், 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கியதாகும் . நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18ஆவது வார்டு உறுப்பினர் நைனார்முகமது, ஷாபத்துல்லா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதில் 18ஆவது வார்டு உறுப்பினர் நைனார் முகமது ஷாபத்துல்லா ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் இறந்ததைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் துணைத் தலைவர் பதிவிக்கான தேர்தலை இன்று(நவ.8) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான ஆணைகளும் கடந்த 30ஆம் தேதிக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் இன்று(நவ.8)பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலராக மாவட்ட ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் தேர்தல் அலுவலராகவும், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் துணை தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்தனர். முதல் அரை மணிநேரம் வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் மானூர் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த கலைச்செல்வி துணைத்தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரை வேறு யாரும் எதிர்த்து மனு தாக்கல் செய்யாததால் கலைச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் அதிகாரிகள் அதற்கான சான்றை அவரிடம் அளித்தனர். துணை தலைவர் தேர்தலைத் தொடர்ந்து மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தேவர் படம் கண்ணாடி உடைப்பு: நெல்லையில் போலீசார் குவிப்பு