ETV Bharat / state

நெல்லையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது: மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?

Tirunelveli District Collector: நெல்லையில் தொடரும் கனமழையால் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 25.செ.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 11:06 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 25 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, "நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் 25 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், வருகின்ற 19ஆம்(செவ்வாய்க்கிழமை) தேதி வரை மழை நீடிக்கக்கூடும்.

மாவட்டத்தை 5 மண்டலங்களாகப் பிரித்து வருவாய், காவல், மின்சாரம், தீயணைப்புத் துறை ஒருங்கிணைந்து செயல்பட 1 கண்காணிப்பு அதிகாரி உட்பட 4 சிறப்பு அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில், மாவட்டம் முழுவதும் 20 முகாம்களில் 985 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 245முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 37 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வெள்ள நீர் கால்வாயில் 300 கன அடி முதல் 3ஆயிரம் கன அடி வரை திறப்பட்ட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றைப் பொறுத்தவரை 85 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை நீர் வரத்துச் செல்லும்.

தற்போது, 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மூன்று தேசிய பேரிடர் மற்றும் மாநிலப் பேரிடர் குழுக்கள் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் கொட்டி தீர்த்த கனமழை: அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.