திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டி ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவும் நகராட்சி மூலமாகவும் குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக பதாகைகள் வைக்கப்பட்டும் குப்பை கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது .
இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த இரு தினங்களாக குப்பைகள் எடுக்கப்படாமல் வருவது சுகாதார சீர் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடந்த இரு தினங்களாக, அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.