திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் அங்கு நடைப்பயிற்சிக்கு சென்ற வின்சென்ட் (82 வயது), என்பவர், யாரோ தவற விட்டுச் சென்ற 16 கிராம் தங்கச் சங்கிலியை எடுத்து பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கச் சங்கிலி நெல்லை, ஜங்சன் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதனையடுத்து உரிய விசாரணைக்கு பிறகு அவரிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.
![முதியவரின் நேர்மையை பாராட்டிய காவல் துணை ஆணையர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09:36:09:1593317169_tn-tvl-02-dchonor-oldman-scrpt-7205101_27062020211139_2706f_1593272499_312.jpg)
நெருக்கடி மிகுந்த கரோனா தொற்றுக் காலத்திலும் நேர்மையாக தங்கச் சங்கிலியை எடுத்து ஒப்படைத்த வின்சென்ட்டை நெல்லை மாநகரத் துணை ஆணையர் சரவணன் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசு வழங்கினார். மேலும் முகக் கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் ஆகிய பொருட்களையும் அவருக்கு வழங்கினார்.
இதையும் படிங்க : 'கரோனா மரணத்தை மறைக்கும் எண்ணம் இல்லை' - சிறப்பு அலுவலர் அபூர்வா