ETV Bharat / state

குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள்: பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் - damaged roads in tirunelveli makes peoples travel hazardous

திருநெல்வேலி: குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள் மரண பள்ளங்களாக மாறிவருவதும், அதனால் தினம் தினம் அவதிப்படும் வாகன ஓட்டிகள் குறித்த தொகுப்பு...

damaged roads in tirunelveli makes peoples travel hazardous
damaged roads in tirunelveli makes peoples travel hazardous
author img

By

Published : Jul 4, 2020, 12:03 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் காட்சி மண்டபம் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. சாலைகளில் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது.

இதன் காரணமாக திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து எஸ். என் நெடுஞ்சாலை வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக பலத்த சேதம் அடைந்துள்ளது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாததால் சாலை சின்னாபின்னமாகி உள்ளது.

சீர்குலைக்கப்பட்ட சாலைகள்

தினமும் இந்த வழியாக பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஏற்கனவே சீர்குலைந்த சாலைகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் இந்த சாலைகள் மரணப் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன.

இதை போல் திருநெல்வேலியில் இருந்து அன்பை, தென்காசி செல்லவேண்டிய சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பிலும் குடிநீர் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அதை சரிவர மூடாமல் விட்டுவிட்டனர். பள்ளம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மணல், கற்களை அங்கேயே குவித்துவைத்துள்ளனர்.

இதனால் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆடி அசைந்தபடி செல்கிறது. இதை பார்க்கும் சில வாகன ஓட்டிகள் பயந்து திரும்பி செல்வதை தினந்தோறும் பார்க்க முடிகிறது. சாலை சீர்குலைந்து காணப்படுவதால் இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் அவசரத்திற்கு செல்லமுடியாமல் தாமதமாகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, 'கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டது. மொத்தம் 230 கோடி ரூபாயில் இந்தத் திட்டம் நடைபெற்றுவருகிறது. அங்கு சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு நாங்கள் நிதி கொடுத்துவிட்டோம். விரைவில் சாலை சீரமைப்பு பணி தொடங்கும்' என்றனர்.

இதுகுறித்து வாகனஓட்டி துர்க்கைராஜ் கூறுகையில், 'இந்தச் சாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல மிகவும் கஷ்டமாக உள்ளது. அடிக்கடி இந்தச் சாலையைதான் நாங்கள் பயன்படுத்துகிறோம். பாலம் கட்டும் வேலை நடக்கிறது என்று பல மாதங்களாக பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

துர்க்கைராஜ்- வாகன ஓட்டி

மற்றொரு வாகனம் ஓட்டிய பாலசுப்பிரமணியன் கூறுகையில், 'குறைந்தப்பட்சம் சாலையை சமன்செய்யும் பணியையாவது செய்ய வேண்டும். அப்போதுதான் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

பாலசுப்பிரமணியன்

சங்கர் கூறுகையில், 'சேரன்மகாதேவியில் இருந்து நான் தினமும் திருநெல்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வந்துசெல்கிறேன். மூன்று மாதங்களாக இந்த பிரச்னை உள்ளது' என்றார்

சங்கர்- வாகன ஓட்டி

திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலையில் இதுபோன்ற அவல நிலை நீடிப்பதால் அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க...ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம் - சீரமைக்கப் பொதுமக்கள் வேண்டுகோள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.