ETV Bharat / state

தச்சநல்லூர் அருகே சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! - Nellai District News

நெல்லை : தச்சநல்லூர் அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தச்சநல்லூர் அருகே சிலிண்டர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

author img

By

Published : Nov 3, 2020, 5:47 PM IST

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அழகியநேரி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று (நவ. 03) இவரது வீட்டில் இருந்த சிலிண்டரானது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பதட்டமடைந்த சதீஸ் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலிண்டரில் இருந்து காஸ் வெளியேறும் துளை வழியாக தீ எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அத்தீயை அணைத்ததோடு, சிலிண்டரை பாதுகாப்புடன் வெளியே எடுத்துச் சென்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில் சதீஷ் வீட்டில் இருந்த சற்று மனநலம் பாதித்த நபர் ஒருவர் தவறுதலாக சிலிண்டரை கையாண்ட போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீது வீடு புகுந்து தாக்குதல்: கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.