ETV Bharat / state

காதலுக்கு எதிர்ப்பு: காதலன் இறந்த சோகத்தில் உயிரிழந்த காதலி - காதல் தோல்வியால் தற்கொலை

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்டதையறிந்து, காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு: காதலன் இறந்த சோகத்தில் இறந்த காதலி - மருத்துவமனையில் உறவினர்கள் சலசலப்பு

author img

By

Published : Aug 11, 2022, 9:14 PM IST

நெல்லை: நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச்சேர்ந்தவர், ஆறுமுகம் (50). இவருக்கு மனைவி சரஸ்வதி(47), மகன் உதயசங்கர்(20), மகள் சுதா (22) ஆகியோர் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் மாமன் பெரியசாமி(60)யின் மகன் சுப்பையாவை (24) சுதா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுப்பையாவிற்கு மூத்த அண்ணன் இருவர் திருமணம் ஆகாத நிலையில் உள்ளதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

காதலுக்கு எதிர்ப்பு: காதலன் இறந்த சோகத்தில் இறந்த காதலி - மருத்துவமனையில் உறவினர்கள் சலசலப்பு
காதலுக்கு எதிர்ப்பு: காதலன் இறந்த சோகத்தில் இறந்த காதலி - மருத்துவமனையில் உறவினர்கள் சலசலப்பு

இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம்(ஆக.9) வீட்டில் இருந்த பயிர் கொல்லி மருந்தைக் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதனையடுத்து அவரை பெற்றோர் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று(ஆக.10) சிகிச்சைப் பலனின்றி சுப்பையா உயிரிழந்தார்.

உடற்கூராய்வு முடிந்து சுப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனால் சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதற்கிடையில் காதலன் உயிரிழந்த மனவேதனையில் சுதாவும் வீட்டில் தனியாக இருந்தபோது கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு தூக்கில் தொங்கினார்.

சுப்பையாவின் இறுதிச்சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி, வீட்டில் சுதா தூக்கில்தொங்கி கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் சுதாவின் உடலை மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே சுதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி விசாரணை நடத்தினார். இதனிடையே அரசு மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் சுதாவின் உடலை உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்த சுதாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

நாங்குநேரியில் உடற்கூராய்வுக்கூடம் இருந்தும் டாக்டர்கள் இறந்தவர்களின் உடல்களை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் நாங்குநேரியில் மருத்துவர்கள் முறையாகப்பணிக்கு வருவதில்லை எனவும்; இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும்; சுதாவின் உடலை நாங்குநேரியிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டம் செய்ய முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி.ரஜத் சதுர்வேதி அவர்களை சமாதானப்படுத்தி நாங்குநேரியில் உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து சுதாவின் உடலை உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி காவல் துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் காதலன் உயிரிழந்த துக்கத்தில் காதலியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை ஏமாற்றிப்பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.