கொடிய உயிர் கொல்லி நோயான கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஜன.02) கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு தொடங்கியுள்ளது.
அதாவது, கரோனாவுக்கு தடுப்பூசி கொண்டுவரப்படும் பட்சத்தில் அதை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் நோயாளிகளின் உடலில் செலுத்துவது எப்படி, தடுப்பூசி போடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து செவிலியருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் இந்த ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.
5 இடங்களில் ஒத்திகை
அதன்படி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், பூந்தமல்லி, நீலகிரி, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் ஒத்திகை நடைபெற்றது. திருநெல்வேலியில் அரசு தலைமை பொதுமருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரமர ஆரம்ப சுகாதார நிலையங்கள் என இந்த மூன்று இடங்களில் மொத்தம் 75 பேருக்கு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் மருத்துவ பேராசிரியர் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர் பொதுமக்களுக்கு நீடில் மட்டும் கொண்டு ஒத்திகை நடத்தினர்.
இதையும் படிங்க:நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்