சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பல மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரமாக குடில் அமைத்து திருவண்ணாமலை, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் குழந்தைகளுடன் தங்கி உள்ளனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ஒருவர் கூறுகையில், தாங்கள் ஊர் ஊராக சென்று ஒரு மாதம் தங்கி மண் அரிப்பது, கூலி வேலை போன்ற வேலைகளை செய்து வருவதாகவும், திடீரென இந்த ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!