தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஏப்.1) ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 110 ஆக உள்ளது.
நேற்று (மார்ச் 31) வட்டாரப் போக்குவரத்து அலுவலக கணக்கருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஒரு வார காலம் அலுவலகத்தை மூடி வைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதேபோல், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இருக்கும் இரண்டு தனியார் பள்ளிகளும் நோய் தொற்று காரணமாக மூடப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கனரா வங்கி ஊழியர்கள் 9 பேரில் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் வங்கியை வரும் திங்கள்கிழமை வரை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதோடு வங்கியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் உத்தரவிடபட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் துரிதபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. வங்கிப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வங்கி மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 600 ஆக உயர்வு!