ETV Bharat / state

தனியார் வங்கி மேலாளருக்கு கரோனா: சகப் பணியாளர்கள் பீதி - வங்கி ஊழியர்களுக்கு கரோனா

திருநெல்வேலி: முருகன் குறிச்சிப் பகுதியிலுள்ள தனியார் வங்கி மேலாளருக்கு கரோனோ வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona-confirms-private-bank-manager
corona-confirms-private-bank-manager
author img

By

Published : Jun 18, 2020, 11:47 AM IST

திருநெல்வேலி மாவட்டம் முருகன் குறிச்சிப் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் வங்கி மேலாளர் ஒருவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக கரோனா அறிகுறியுடன் காணப்பட்ட அவருக்கு நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவில் இன்று அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

மேலும் அவருடன் பணியிலிருந்தவர்களை 14 நாள்கள் தனிமையிலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும் திருநெல்வேலியில் நேற்று மாலை நிலவரப்படி 522 பேர் கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 28 பேருக்கு கரோனோ தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூரில் உயரும் கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.