திருநெல்வேலி: திருமலைப்புரம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம். இவரது மகன் சரவணன்(21). பொறியியல் கல்லூரி மாணவரான சரவணன் நேற்று (ஜுன் 23) திருமண மறுவீடு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினருடன் சிங்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தந்தை உள்பட குடும்பத்தினருடன் சரவணன் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார். அவரின் தந்தை காப்பாற்ற முயற்சித்தும் பலனின்றி நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் சரவணனின் உடலைத் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் தந்தை, மகன் உயிரிழந்தனர். அதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வியாபாரி கொலை வழக்கு: காவலரிடம் தொடர் விசாரணை!