ETV Bharat / state

வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்! - போட்டித் தேர்வர்களுக்கு கற்றல் மையம்

பாளையங்கோட்டை பகுதியில் வீதிகளில் படித்து வந்த போட்டித் தேர்வர்களைக் கண்ட ஆட்சியர் அவர்களுக்கு நூலகம், குளிர்சாதன வசதியிடன் அதிநவீன கற்றல் மையம் அமைத்துக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வீதியில் படித்து வந்த போட்டித் தேர்வர்களுக்கு கற்றல் மையம் ;  நெல்லை ஆட்சியர் அசத்தல்

author img

By

Published : Nov 16, 2022, 6:26 PM IST

திருநெல்வேலி: விவசாயம் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்தும் இயந்திரமயாமன் இந்த நவீன காலத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஒருவர் கல்லூரி படிப்பை முடிப்பதே அரிதாக இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள் அனைவரையும் உயர் கல்வி வரை படிக்க வைக்கின்றனர்.

கற்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தற்போது இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது. தனியார் துறைகள் மற்றும் தொழில்களில் அதிக வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவை நிரந்தரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே சமீப காலமாக இளைஞர்கள் பெரும்பாலானோர் அரசு வேலையைத் தேடி ஓடத் தொடங்கி விட்டனர்.

இளைஞர்களின் அரசு வேலை கனவை நினைவாக்கும் வகையில் திரும்பும் இடமெல்லாம் பயிற்சி அகாடமி புற்றீசல் போல் முளைத்துள்ளன. பள்ளி கல்லூரிகளில் பொதுத்தேர்வுகளுக்காக விழுந்து விழுந்து படித்து வந்த மாணவர்கள் தற்போது போட்டி தேர்வுக்காகவும் இரவு பகல் தூங்காமல் படிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அகடாமியில் வருமான நோக்கோடு அளவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்க்கப்படுவதால் தங்கள் விருப்பப்படி அவர்கள் அங்கிருந்து சுதந்திரமாக படிக்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் அமர்த்து படிக்கலாம் என்றால் அங்கும் குடும்ப சூழலால் சில தடைகள் இருக்கிறது. எனவே போட்டித் தேர்வர்கள் ஆங்காங்கே சாலைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் அமர்ந்து படிக்கின்றனர்.

வீதியில் படித்து வந்த போட்டித் தேர்வர்களுக்கு கற்றல் மையம் ; நெல்லை ஆட்சியர் அசத்தல்

அதேபோல் அகாடமியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களும் பொது இடங்களில் படித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் சாலை ஓரங்களில் போட்டித் தேர்வர்கள் நாள் முழுவதும் அமர்ந்து படித்து வந்தனர்.

குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களிலும் பொது இடங்களில் அமர்ந்து தேர்வுக்கு தயாராவதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் மீதும் கல்வி மீதும் அதிக ஆர்வம் கொண்ட நெல்லை ஆட்சியர் விஷ்ணு, ஒரு நாள் அந்தப் பூங்கா வழியாக சாலையை கடக்கும் போது போட்டி தேர்வர்கள் அமர்ந்து படிப்பதை கண்டு காரில் இருந்து இறங்கி மாணவர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர், அவர் அங்கிருந்து சென்று விட்டாலும் இதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல் பூங்காவில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி பூங்காவுக்கு எதிரே உள்ள பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் ஏராளமான கடைகள் வாடகைக்கு கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருந்து வருகிறது.

இதையடுத்து வீணாகக் கிடக்கும் அந்தக் கடைகளை போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கற்றல் மையமாக மாற்ற முடிவெடுத்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியரின் சிறப்பு முயற்சியால் அவசர அவசரமாக பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் இருந்த சில அறைகள் மாற்றியமைக்கப்பட்டு கற்றல் மையமாக உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

ஏசி(AC) மற்றும் நூலக வசதியுடன் இந்தக் கற்றல் மையம் உருவாக்கப்பட்ட பணிகள் முடிவு பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் விஷ்ணு போட்டி தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரத்யேக கற்றல் மையத்தை தனது கரங்களால் திறந்து வைத்தார். ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகத்துடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக இருக்கைகள், மேஜைகள், குடிநீர் போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு நுழைவு கட்டணமாக வெறும் 12 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் நாள் முழுவதும் அமர்ந்து படிக்கலாம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கற்றல் மையம் திறந்திருக்கும்.

நூலகத்தில் தமிழக வரலாறு மற்றும் தலைவர்களின் வரலாறு போன்ற பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், உலக வரைபடங்கள் இந்திய வரைபடங்களும் சுவரில் ஓட்டப்பட்டுள்ளன. புத்தகத்திற்காக மாணவர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆட்சியரின் இந்த நடவடிக்கையை கண்டு மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எங்கோ ஒரு மூலையில் சாலையோரம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தங்களுக்கு இப்படி ஏசி நூலக வசதியுடன் கூடிய ஒரு அறை கிடைக்கும் என்று கனவில் கூட அவர்கள் நினைத்து பார்க்கவில்லை என போட்டித்தேர்வர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ஆட்சியரருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடவுளின் குழந்தைகளுக்கு கல்வி ஒளி: நெல்லை 'அப்பர் கிளாப்டன்' பள்ளியின் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.